Tuesday, 23 June 2015

மொபைல் போனால் இளம் பெண்ணின் கால் சிக்கி கொண்ட பரிதாபம்



நம்மில் பலர் நடக்கும் போது மொபைல் போனைப் பயன்படுத்தி மற்றவர்களிடம் பேசுவதையும், எஸ்.எம்.எஸ். அனுப்பி கொண்டு நடப்பது எவ்வளவு ஆபத்தானது என்பது பற்றி பல பேருக்குத் தெரியாது .

இப்படி பாதையை கவனிக்காமல் சீனாவை சேர்ந்த இளம் பெண் தனது நண்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி கொண்டு செல்கையில் பாதையோரம் இருந்த மூடியின் இரும்பு கம்பிகளுக்கிடையில் அந்த பெண்ணின் நீண்ட மெல்லிய கால் சிக்கி கொண்டது. அந்த பெண் பல முறை முயற்சித்தும் கம்பிகளுக்கிடையில் இருந்து காலை வெவ்வேறுபடுத்த முடியவில்லை.அவர் 2 மணி நேரம் தவித்து உள்ளார்.

இறுதியில் தீயணைப்பு படையினர் வந்து 45 நேர போராட்டத்திற்கு பிறகு கம்பிகளை அகற்றி அந்த பெண்ணின் காலை விடுவித்தனர்.பிறகுதான் தீயணைப்பு படையினரும் பாதையில் செல்லும் போது கவனமாக இருக்குமாறு அறிவுறித்தி அனுப்பினர்.

இது குறித்து தீயணைப்பு படையின் செய்தி தொடர்பாளர் மிங் லை கூறும் போது:-

நாங்கள் கம்பியை அகற்றி பெண்ணின் காலை எடுத்து விட்டோம். அவரது காலில் கம்பினால் ஏற்பட்ட சிறிய காயங்கள் மட்டும் உள்ளது அது விரைவில் குணமாகி விடும் என கூறினார்.அதனால் எப்போதும் ரோட்டில் செல்லும் போது கவனமாக செல்லுங்கள் மொபைல் பேசிக்கொண்டோ , அல்லது SMS அனுப்பிக் கொண்டு செல்லும் போது ஏதாவது விரீதம் ஏற்படலாம். என கூறினார்

Loading...