Saturday, 16 May 2015

வந்தாறுமூலையில் செங்கலடி பிரதேச செயலக அரச உத்தியோகத்தர் மீது தாக்குதல்

east-uni-
வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தமிழ் மொழியில் தேசியகீதம் இசைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்த சிங்கள மாணவர்கள் பலர் செங்கலடி பிரதேச செயலக அரச உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

விதாதாவள நிலையமும் செங்கலடி பிரதேச செயலகமும் இணைந்து கடந்த மூன்று தினங்களாக கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் இந்த கண்காட்சியை நடத்தியது

இக் கண்காட்சி நிகழ்வில் இன்று தமிழ் மொழியில் தேசியகீதம் இசைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்த சிங்கள மாணவர்கள், ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் உத்தியோகத்தர் ஒருவர் மீது சரிமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குpழக்கு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மீதும் தமிழ் மக்கள் மீதும் சிங்கள மாணவர்கள் தாக்குதல் நடத்துவது இது முதல் தடவையல்ல, பல தடவைகள் தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களால் தாக்கப்பட்டுள்ளனர். ஆனால் சிங்கள மாணவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகமோ அல்லது பொலிஸாரோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதன் விளைவே இன்று தமிழ் அரச ஊழியர் ஒருவர் தமிழ் மண்ணில் வைத்து சிங்களவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண தமிழர்கள் முக்கியமாக மட்டக்களப்பு தமிழர்கள் தொடர்ந்து சிங்களவர்களால் தாக்கப்படுவதை அப்பிரதேச தமிழ் மக்கள் அனுமதிக்கப் போகிறார்களா?
Loading...