Monday, 28 August 2017

பொய்யான தர்க்கங்கள் இனிமேலுமவேண்டாம்! தேர்தலை நடத்துக

தேர்தலை காலந் தாழ்த்துவதற்காக தொடர்ந்தும் போலியான தர்க்கங்களை முன்வைக்காமல் இந

anura2்த வருட இறுதிக்குள் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

2012 ஆம் ஆண்டு சமர்பிக்கப்பட்டிருந்த உள்ளுராட்சி மன்ற சட்டமூலமே கடந்த பாராளுமன்றத்தில் திருத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

2012 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டமூலம் அப்போதைய துறைசார் அமைச்சர் அதாவுல்லாவினால் சமர்பிக்கப்பட்டிருந்தது.

எனினும் அந்த சட்டமூலம் பெசில் ராஜபக்ஸவின் அரசியல் நோக்கங்களை பிரதானமாக கொண்டே தயாரிக்கப்பட்டிருந்தது என்று அனுரகுமார திசாநாயக்க குற்றம்சாட்டினார்.

அதனால் அந்த உள்ளுராட்சி தேர்தல் முறையில் பாரிய முரண்பாடு காணப்பட்டது.

பெசில் ராஜபக்‌ஷவின் நோக்கம்இ இரண்டு கட்சி முறைக்கு இடமளிப்பதாக இருந்தது என்றும் அவர் குற்றம்சுமத்தினார்.

எந்தவொரு தேர்தலிலும் பொதுமக்களின் விருப்பங்களுக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே விதியாக இருக்க வேண்டும்.

Read More »

அமெரிக்க விசுவாசம்


பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

மோடி அரசாங்கம், அமெரிக்காவை ராணுவ ரீதியாக மிகவும் நெருக்கமானமுறையில் கட்டித்தழுவிக்கொண்டிருக்கிறது. டிரம்ப் நிர்வாகத்திற்கு நரேந்திர மோடி தனMODI TRUMP்னாலான அனைத்து விதங்களிலும் விசுவாசமாக நடந்துகொள்வார் என்றே தோன்றுகிறது.

ஆகஸ்ட் 15 அன்று, டொனால்டு டிரம்பிற்கும் நரேந்திர மோடிக்கும் இடையே தொலைபேசி வாயிலாக ஓர் உரையாடல் நடந்திருக்கிறது. டிரம்ப், மோடிக்கு இந்தியாவின் சுதந்திர தின வாழ்த்துக்களைக் கூறியதுடன், இரு நாடுகளின் உறவுகளுக்கு இடையே புதிய சில நடவடிக்கைகள் குறித்தும் கோடிட்டுக்காட்டியிருக்கிறார்.

வெள்ளை மாளிகை யிலிருந்து வந்துள்ள செய்தி, "இருநாட்டின் தலைவர்களும் இந்திய – பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் வளர்த்துக்கொள்வதற்காக ஒவ்வொரு நாட்டின் சார்பிலேயும் இரு அமைச்சர்களைக் கொண்ட ஓர் அமைப்பு நிறுவப்படும்" என்றும் "அந்த அமைப்பு ராணுவரீதியான (strategic) கலந்தாலோசனைகளை முன்னெடுத்துச் செல்லும்" என்றும் கூறுகிறது.

புதிய இரண்டுக்கு இரண்டு

இரண்டுக்கு இரண்டு அமைச்சர்கள் என்பது, இந்தியாவின் தரப்பில் ராணுவ அமைச்சர் மற்றும் அயல்துறை அமைச்சர்களையும், இதேபோன்று அமெரிக்காவில் இத்துறைகளுக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சர்களையும் குறிப்பிடுகிறது.

இதுவரை இந்த 2க்கு 2 என்பது, நம் நாட்டின் சார்பில் அயல்துறை அமைச்சரும், வர்த்தகத்துறை அமைச்சருமாக இருந்தார்கள். அதேபோன்று அமெரிக்காவின் சார்பிலும் அயல்துறை அமைச்சரும், வர்த்தகத்துறை அமைச்சருமாகத்தான் இருந்தார்கள். இப்போது வர்த்தகத்துறை அமைச்சர் என்பது ராணுவத்துறை அமைச்சர் என்று மாற்றப்பட்டிருக்கிறது.

இம்மாற்றம், இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ரீதியான ஒத்துழைப்பு அதிகரித்துக்கொண்டிருப்பதையே காட்டுகிறது. அமெரிக்கா, ஆசியா – பசிபிக் பிராந்தியத்தில் இவ்வாறு 2க்கு 2 அமைச்சர்களைக் கொண்ட ராணுவக் கூட்டணிகளை இதுவரையிலும் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன்தான் வைத்திருந்தது. இப்போது அதனுடன் இந்தியாவும் சேர்ந்துகொண்டிருக்கிறது.

இந்திய-பசிபிக் பிராந்தியம் என்பதன் பொருள் என்னவென்பதை இந்தப் பின்னணியில் பார்த்திட வேண்டும். 2015 ஜனவரியில் ஒபாமா இந்தியாவிற்கு வந்திருந்த சமயத்தில், ஆசிய – பசிபிக் மீதான அமெரிக்க – இந்திய கூட்டு தொலைநோக்கு அறிக்கை (US-India Joint Vision Statement on Asia Pacific)  ஒன்று தயாரிக்கப்பட்டதைப் பார்த்திட வேண்டும். இப்போது இவர்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ள கூட்டணி என்பது, சீனாவே தங்களின் பிரதான கவலை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மோடியின் நன்றி உணர்த்துவது என்ன?

இந்தப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலைமையை ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவிற்கு மோடி சென்றிருப்பதை, மோடி "வட கொரிய அச்சுறுத்தலுக்கு எதிராக உலகத்தை ஒன்றுபடுத்திட ஒரு வலுவான தலைமையைக் கொடுப்பதற்காக ஜனாதிபதி டிரம்புக்கு நன்றி" தெரிவித்திருப்பதிலிருந்தே நன்கு தெரிந்துகொள்ள முடிகிறது. இந்தியா, அமெரிக்காவின் ஒரு நம்பகமான கூட்டாளியாக இருந்திடும் என்பதை மீண்டும் உறுதியளித்திடும் விதத்தில் இந்தக்கூற்று அமைந்திருக்கிறது.

அதன்பிறகு, ஜனாதிபதி டிரம்ப், ஆப்கானிஸ்தானத்துடனும், தெற்கு ஆசிய நாடுகளுடனும் அவருடைய அணுகுமுறை எப்படி இருந்திட வேண்டும் என்று உரையாற்றியிருக்கிறார். பாகிஸ்தானில் அடைக்கலம்புகுந்துள்ள பயங்கரவாதிகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்ததில் மோடி அரசாங்கம் புளகாங்கிதம் அடைந்திருக்கிறது.

டிரம்ப் மேலும் கூறுகையில், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பல பில்லியன் டாலர்கள் கொடுத்திருப்பதாகவும், இந்நிலையில் தாங்கள் யாருக்கெதிராகப் போராடிக் கொண்டிருக்கிறோமோ அத்தகைய பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதை சகித்துக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இவ்வாறு அறிக்கைகள் விடுவதெல்லாம் அமெரிக்கா கடந்த 15 ஆண்டுகளாக செய்து வந்ததுதான். எதார்த்த நிலை என்னவென்றால், ஆப்கானிஸ்தானத்தில் பாகிஸ்தானின் உதவியில்லாமல் அமெரிக்காவால் எதுவும் செய்ய முடியாது என்பதுதான்.

டிரம்பின் எதிர்பார்ப்பு

இந்தியா குறித்து, டிரம்ப் கூறுகையில், "இந்தியா, அமெரிக்காவுடன் பல பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானத்தில் எங்களுக்கு அதிக அளவில் இந்தியா உதவிட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். குறிப்பாக, பொருளாதார உதவி மற்றும் வளர்ச்சிப் பகுதிகளில் அதன் உதவி மிகவும் அவசியமாகும்.

" டிரம்ப், தன்னுடைய நேட்டோ கூட்டணி நாடுகளுடனும் இதே போன்றே நிலை எடுத்திருக்கிறார். தாங்கள் தங்களுடைய ராணுவத்தினருக்கு அதிக அளவில் பணம் செலவு செய்துகொண்டிருப்பதாகவும், அத்தகைய செலவுகளைத் தங்களுடன் ராணுவக் கூட்டணி வைத்துள்ள நாடுகள் தாங்குவதை அமெரிக்க எதிர்பார்க்கவில்லை என்றும் டிரம்ப் கூறியிருக் கிறார். ஆப்கானிஸ்தானத்தைப் பொறுத்தவரை, தன்னுடைய கூட்டணிகளாக இருக்கக்கூடிய பாகிஸ்தானும் இந்தியாவும் பல பில்லியன் டாலர்கள் ஈட்டிக்கொண்டிருப்பதால், அதற்குப்பிரதிபலனாக தங்களுடைய உரிய பங்கினைச் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் எதிர்பார்க்கிறார்.

இந்த ஆண்டின் இறுதிவாக்கில் அமெரிக்க ராணுவ அமைச்சர் ஜெனரல் ஜேம்ஸ் மாட்டிஸ் இந்தியா வர இருக்கிறார் என்று கூறப்பட்டிருக்கிறது. லீமோ (LEMOA-Logistics Exchange Agreement)  கடல்வழி மற்றும் வான்வழி பரிவர்த்த னை ஒப்பந்தத்தினைத் துவக்கி வைப்பதே அவர் திட்டம். அப்போது அவர் இந்தியாவிற்குக் கொண்டு வரும் விமானப்படை விமானத்திற்கு எரிபொருள் களை நிரப்புதல் மற்றும் பணிபுரிதல் ஆகிய வற்றைத் திறந்துவைத்திடுவார்.

லீமோ என்பது இந்திய தலங்களை (bases)  அமெரிக்கப் போர் விமானங்கள்
மற்றும் போர்க் கப்பல்கள் பயன்படுத்திக்கொள் வதற்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கான ஒப்பந்தமாகும்.

தங்கள் வளைக்குள் இழுக்க

அமெரிக்காவுடன் ராணுவ ஒத்துழைப்பு அதிகரித்துக் கொண்டிருப்பது, டோக்லாம் சமவெளியில் சீனாவுடன் பிரச்சனைகள் தொடர்ந்துகொண்டி ருக்கும் பின்னணியில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுவே இந்தியாவை தங்களின் போர்த்தந்திர வலைக்குள் ஈர்ப்பதற்குச் சரியான தருணம் என்று அமெரிக்கா கருதுகிறது.

 

ஒவ்வோராண்டும் நடத்தப்படும் மலபார் பயிற்சியில் ஆஸ்திரேலியாவையும் சேர்த்து அதனை விரிவாக்கிடவேண்டும் என்று இந்தியாவை அமெரிக்கா நச்சரித்துக்கொண்டி ருக்கிறது. அவ்வாறு நடைபெற்றால் அது நான்கு நாடுகளின் – அதாவது அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா என நான்கு நாடுகளின் – கூட்டுப் பயிற்சியாக மாறிவிடும்.

மோடி அரசாங்கம், போர் ஆயுதங்கள் செய்திடும் அமெரிக்க நிறுவனங்கள், இந்தியாவில் ராணுவத்தளவாடங்கள் உற்பத்தி செய்வதற்குக் கதவைத் திறந்துவிடும் வேலைகளிலும் இறங்கி இருக்கிறது.இவற்றுடன் இந்தியக் கார்ப்பரேட்டுகளும் பன்னாட்டு நிறுவனங்களும் கேந்திரமான ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்திடவும் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது.

அமெரிக்காவின் ராணுவ மற்றும் போர்த்தந்திர நடவடிக்கைகளுக்கு இந்தியாவை அடிபணிய வைத்திருப்பது, நாட்டின் இறையாண்மைக்கும், சுதந்திரத்திற்கும் மாபெரும் அச்சுறுத்தலாகும். போலி தேசிய இந்துத்துவா சக்திகளுக்கு எதிரான போராட்டத்துடன் அமெரிக்காவிடம் இந்தியா சரணாகதி அடைந்துகொண்டிருப்பதற்கு எதிராகவும் போராடிட வேண்டும்.

செப்டம்பர் 1 அன்று ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தினமாகவும், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான தினமாகவும் அனுசரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக்குழு அறைகூவல் விடுத்திருக்கிறது. இந்தப் பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் மிகவும் விரிவான அளவில் எடுத்துச் சென்றிட வேண்டும்.


===பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்====                                                                                                          தமிழில்: ச.வீரமணி

Read More »

ஆமைவேக செயற்பாடுகள்


-     கருணாகரன்

மந்த நிலையில்தான் நாட்டின் நடவடிக்கைகள் உள்ளனவா? என்று பலரும் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். அரசியல் அமைப்புத்திருத்தமாக இருக்கட்டும். அபிவிருத்தித்திட்டங்களாக இருக்கRanil-maithriட்டும். தேசிய ஒருமைப்பாட்டுக்கான நடவடிக்கைகளாக இருக்கட்டும் நாட்டில் நிலவுகின்ற முக்கியமான – முதன்மைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளாக இருக்கட்டும். எதையும் இந்த அரசாங்கம் வேகமாகவோ விரைவாகவோ செய்வதாகக் காணவில்லை. எல்லாமே மந்த நிலையில்தான் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

சில நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்கிறது எனச் சொல்லப்படுகிறது. அப்படிச்சொல்லப்படுகின்ற அளவுக்கு அவையெல்லாம் முன்னேற்றமாக நடந்து கொண்டிருக்கிறதா என்றே தெரியவில்லை. அப்படியென்றால், அரசாங்கம் தற்போது முன்னெடுத்துக் கொண்டிருக்கின்ற தேசிய வேலைத்திட்டம் என்ன? பிராந்திய ரீதியான வேலைகள் என்ன? என்று யாருக்காவது தெரியுமா என்று கேட்டால் எல்லோரும் "தெரியவில்லை" என்றே சொல்கிறார்கள். "அரச தலைவர்களின் முக்கியமான நடவடிக்கைகள்" என்று எதைச் சொல்ல முடியும்? என்று கேட்கிறார் ஒரு மூத்த அரசியல் ஆய்வாளர். அந்தளவுக்கு எல்லாமே தெளிவற்றுப் புகை மூட்டமாக உள்ளன. ஏறக்குறைய மக்கள் நம்பிக்கையீனங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.

ஆனால், இந்த அரசாங்கம்தான் ஏனைய அரசாங்கங்களையும் விட வேகமாகச் செயற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகமாகக் கொண்டது. இந்த அரசாங்கத்துக்கு வலுவான எதிர்த்தரப்போ, எதிர்க்கட்சிகளோ கிடையாது. இந்த அரசாங்கத்துக்கே சிறுபான்மைச் சமூகங்கள் தொடக்கம் ஏனைய எல்லாத் தரப்புகளின் ஆதரவும் உள்ளது. இன்னொரு வகையில் சொன்னால், அனைத்துச் சமூகங்களும் பங்கேற்கும் ஒரு கூட்டரசாங்கம் இதுவாகும். எதிர்க்கட்சியும் ஆளும் கட்சியும் பின்னிப் பிணைந்திருக்கும் ஆட்சி இது.

ஆகவே எதையும் துணிச்சலாகச் செய்ய இந்த அரசாங்கத்தினால் முடியும். இப்படி எல்லா வாய்ப்புகள் இருக்கிறபோதும் ஏன் அரசாங்கம் எதையும் வேகமாகச் செய்வதற்குப் பின்னிற்கிறது?

இதற்கு முக்கியமான காரணம், இது ஒரு கூட்டரசாங்கமாகப் புற நிலையில் உள்ளபோதும் அகரீதியாகத் தன்னைத் தேசிய அரசாங்கம் என்று எண்ணிக் கொள்ளவில்லை என்பதேயாகும். தேசிய அரசாங்கமாகச் செயற்படும் எனச் சொல்லப்பட்டாலும் அல்லது அப்படிச் சொல்லிக் கொண்டு ஆட்சிக்கு வந்திருந்தாலும் நடைமுறையில் இது சராசரியான அரசாங்கமாக, அதற்கும் கீழானதாகவே உள்ளது. இந்தத் தடுமாற்றத்துக்கும் பின்னடைவுக்கும் காரணம், இந்த அரசாங்கம் முரண்நிலைப் பங்காளிகளை அதிகமாகக் கொண்டிருக்கிறது என்பதேயாகும். அத்துடன், ஐ.தே.கவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஆட்சியில் இணைந்திருந்தாலும் உள்ளே இரட்டுக்குமிடையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் போட்டிகளும் உள் மோதல்களும் எந்தத் தீர்மானத்தையும் உறுதியாக எடுக்க முடியாமல் தடுக்கின்றன. இன்னொரு புறத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நடந்து கொண்டிருக்கும் இழுபறிகளும் முரண்பாடுகளும் கூட தற்போதைய அரசாங்கத்தை வினைத்திறனோடு இயங்குவதற்குத் தடையாக உள்ளன. ஜனாதிபதி எந்தத் தீர்மானத்தையும் இரண்டு அணியாகப் பிரிந்து நிற்கும் தன்னுடைய கட்சியின் நிலைப்பாட்டுக்குக் கட்டுப்பட்டே எடுக்க வேண்டியுள்ளது.

ஆகவே இவற்றைச் சீர்ப்படுத்தாமல் இந்த அரசாங்கம் முன்னகர முடியாது. ஆனால், இதைச் சீர் செய்வதற்குரிய திடசங்கற்பமான முடிவுகள் தலைவர்களால் எடுக்கப்படவில்லை. சில சந்தர்ப்பங்களில் அப்படி அதிரடியான முடிவுகளை எடுக்கக்கூடிய தகமையும் ஆற்றலும் தங்களுக்குண்டு என ஜனாதிபதியும் பிரதமரும் வெளிப்படுத்திக் காட்டினாலும் தேசியக் கொள்கை, தேசிய அளவிலான நடைமுறை, தேசியப்பிரச்சினைகளாக இருப்பவற்றுக்கான தீர்வு என்பவற்றில் நிறையத் தடுமாற்றங்களே உள்ளன. இதற்கொரு எளிய உதாரணத்தைச் சொல்லி அப்பாலே செல்லலாம்.

ஊழல் குற்றச்சாட்டுகளின் நெருக்கடியினால் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை அமைச்சுப் பதவியிலிருந்து விலகியிருக்குமாறு அழுத்தம் கொடுத்துச் செயற்படுத்திய பிரதமரும் ஜனாதிபதியும் அரசியலமைப்புத் திருத்தத்தை விரைவுபடுத்திச் சபைக்குக் கொண்டு வரவோ, வடக்குக் கிழக்கில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கோ முன்வரவில்லை. அல்லது காணாமலாக்கப்பட்டோரின் விவகாரத்தைப்பற்றிப் பேசுவதற்குத் தயாராகவில்லை. அல்லது, நாட்டின் வேலையில்லாப் பிரச்சினைக்கு ஒரு பொருத்தமான தீர்வை எட்டுவதைப்பற்றிச் சிந்திக்கவில்லை. குறைந்த பட்சம் தேசிய அரசாங்கமாக இந்த அரசாங்கத்தின் ஆட்சியை நடத்த வேண்டும் என்று தங்கள் தங்கள் கட்சியினருக்கும் அமைச்சரவைக்கும் கூட இவர்கள் தெளிவுபடுத்தவில்லை.

எனவேதான் மந்த நிலையும் தடுமாற்றங்களும் குழப்பங்களும் இந்த ஆட்சியில் நீடிக்கின்றன. இதையே தமக்கான வாய்ப்பாக எதிர்கட்சிகளின் கூட்டுமுன்னணியினரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். ஏறக்குறைய இதில் அவர்கள் கணிசனமான அளவுக்கு வெற்றியுமடைந்திருக்கின்றனர். எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணியும் ஜே.வி.பியும் சொல்வதில் நியாயமுண்டு என்று தென்பகுதி மக்களில் கணிசமான தொகையினர் நம்புகின்றனர். இதைப்போல இந்த அரசாங்கமும் தங்களை ஏமாற்றுகின்றது என்ற உணர்வு வடக்குக் கிழக்கில் உள்ள மக்களுக்கும் உண்டாகியிருக்கிறது. இதனுடைய வெளிப்பாடுகளே முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்தை நம்புவதால் பயனில்லை. முஸ்லிம்கள் தொடர்ந்தும் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது அடிமைத்தனத்திலேயே போய் முடியும் என முஸ்லிம் சமூகத்தின் ஊடகங்களும் சிந்தனையாளர்களும் பகிரங்கமாகக் குரலெழுப்பி வருவதுமாகும்.

ஏறக்குறைய இதை ஒத்த நிலையே தமிழர்களிடத்திலும் ஏற்பட்டுள்ளது. ஏராளம் எதிர்பார்ப்புகளோடு தமிழர்கள் மைத்திரி – ரணில் கூட்டரசாங்கத்தை ஆதரித்தனர். மைத்திரி – ரணில் ஆட்சி உருவாகியபோது சிங்கள மக்கள் அதைக் கொண்டாடியதை விடப் பெரும்பான்மையான தமிழர்கள் அதைக் கொண்டாடினார்கள். தங்களின் மீதான அச்சுறுத்தல் இனிப்போய்விடும் என நம்பினார்கள். குறிப்பாகப் புலம் பெயர் தமிழர்கள் இதை முழு அளவில் கொண்டாடினார்கள் எனலாம். அப்படிக் கொண்டாடிய அளவுக்கும் நம்பிய அளவுக்கும் நாட்டிலுள்ள தமிழர்களுக்கு மைத்திரி – ரணில் அரசாங்கம் இனிக்கவில்லை. புலம்பெயர் தமிழர்களுக்குச் சற்று உவப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்பது உண்மையே. குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் தற்போது அச்சமற்ற நிலையில் நாட்டுக்கு வந்து திரும்பக்கூடிய நிலை உருவாகியுள்ளது. அதாவது அவர்கள் அச்ச உணர்வோடு பயந்து பயந்து வரவேண்டியதில்லை. கடந்த ஆட்கசியின்போது கட்டாயமாக நாடு கடத்தப்பட்டிருந்த முக்கியமான ஒரு தமிழ்க்கவிஞர் தற்போது வெற்றிகரமாக நாட்டுக்கு வந்து சுற்றித்திரிந்து விட்டுத் திரும்பியிருக்கிறார். இதைவிடப் புலம்பெயர் தமிழர்களுககு இரட்டைக் குடியுரிமை வேறு கிடைப்பதற்கான ஏற்பாடுகளை இந்த அரசாங்கம் இலகுவாகச் செய்து முடித்துள்ளது. இது தனியே புலம்பெயர் தமிழர்களுக்கான விசேட ஏற்பாடில்லை. சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களும் இந்த நன்மைகளைப் பெறுகிறார்கள் என்றாலும் தமிழர்களைப் பொறுத்தவரையில் இது தமக்காக இந்த ஆட்சியினால் செய்யப்பட்டதாகவே நம்பப்படுகிறது.

ஆகவே இந்த மாதிரிச் சின்னச் சின்ன விடயங்களைத் தவிர, நாட்டின் தேசியப் பிரச்சினைகளான பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்புப் பிரச்சினை, இனப்பிரச்சினைக்கான தீர்வு, அரசியலமைப்புத்திருத்தம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமலாக்கப்பட்டோரின் விவகாரம், சிவில் சமுக வெளியில் இராணுவத்தலையீடு அல்லது இராணுவ அதிகாரம், நாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கியமான அபிவிருத்தித்திட்டங்கள் போன்றவற்றைப் பற்றிய அரசாங்கத்தின் செயற்பாட்டு முறைபற்றி எதையும் அறிய முடியவில்லை.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்த இரண்டு ஆண்டுகளிலும் இவற்றில் எட்டப்பட்ட முன்னேற்றங்களைக் குறித்து ஆட்சியாளர்களினால் மீள் பார்வைகளும் மதிப்பீடுகளும் செய்யப்பட்டுள்ளனவா? கூட்டாட்சியில் பங்கேற்கும் தரப்பினரோடு இவற்றைப்பற்றி அரச தலைவர்கள் உரையாடியிருக்கிறார்களா? நாட்டு மக்களுக்கு இதைக் குறித்து ஏதாவது சொல்லப்பட்டுள்ளதா என்றால், எதற்கும் இல்லை என்பதே பதிலாக உள்ளது.

அப்படியென்றால், இந்த அரசாங்கம் எப்படித் தன்னுடைய ஆட்சிக்காலத்தை முடிக்கப்போகிறது? இப்படியே மெல்ல மெல்ல இழுத்துக் கொண்டு போய், ஆட்சிக்காலத்தை முடிவுறுத்தப்போகிறதா? அல்லது தனக்கு முன்னே உள்ள சவால்களை எதிர்கொண்டு, தனக்கான பொறுப்புகளை நிறைவேற்றப்போகிறதா?

இப்போதுள்ள சூழ்நிலையின்படி இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் பாதிக்குக் கிட்டவாக வந்துள்ளது. இதற்குள்ளேயே செய்யக்கூடிய வேலைகளைச் செய்திருக்க வேணும். குறைந்த பட்சம் பாதியளவுக்காவது முக்கியமான வேலைகளில் நகர்ந்திருக்க வேணும். அப்படி நடக்கவில்லை. இனி அது மெல்ல மெல்ல தேர்தல் காலத்தை நோக்கி நகரவேண்டியிருக்கும். தேர்தல் காலத்தை நோக்கி நகர்வதாக இருந்தால், இரண்டு பிரதான கட்சிகளும் தத்தமது கட்சி நலன் நோக்கின் அடிப்படையிலும் சிங்கள மக்களின் பாரம்பரிய மனநிலையின் அடிப்படையிலுமே செயற்பட வேண்டியிருக்கும். அப்படி நிகழ்ந்தால் எந்தப் பிரச்சினையும் தீர்க்கப்படப்போவதில்லை.

அப்படியென்றால் அடுத்து என்ன என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது உண்டாக்கிய எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் ஏராளம். அதிலும் இந்த அரசாங்கம் அமைவதற்குப் பின்னணியாக இருந்த மேற்குலகமும் இந்தியாவும் ஏற்படுத்திய நம்பிக்கைகள் பல. இலங்கையின் தேசிய நெருக்கடிகள் அத்தனைக்கும் ஒரு தீர்வாக கூட்டரசாங்கத்தின் ஆட்சி நடக்கும் என்ற உத்தரவாதத்தை எழுதப்படாமல், வாய்மொழி மூலமாக ஒவ்வொரு சமூகத்தின் அரசியல் தலைமைகளிடத்திலும் ஐ.தே.க மற்றும் சு.கவிடத்திலும் அளித்திருந்தன. இதை இலங்கையின் ஒரு தொகுதிப் புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், சமூகச் செயற்பாட்டியக்கங்களைச் சேர்ந்தோருக்கும் வழங்கியிருந்தன. இந்த உத்தரவாதத்தை நம்பியே "மாற்றத்துக்கான வழி" என்ற அடிப்படையில் புதிய ஆட்சியை உருவாக்குவதற்காக ஒவ்வொரு தரப்பும் உயிராகச் செயற்பட்டது. அப்படிச் செயற்பட்டே ராஜபக்ஸவினரின் ஆட்சி தூர விலக்கப்பட்டது.

ஆனால், ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பிறகு நடைமுறைகளில் மாற்றம் இல்லை என்றால் அதனுடைய அர்த்தம் என்ன? இதற்கு யார் பொறுப்புக் கூறுவது? யாருடைய விரலை யார் கடிப்பது?

உண்மையில் இந்த ஆட்சி மாற்றத்தின் மூலமாக இந்தியாவுக்கும் மேற்குலகத்துக்குமே அதிக நன்மைகள் – அனுகூலங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாகச் சீனாவின் அதிகரித்த செல்வாக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியச் செல்வாக்கும் மேற்குலகத்தின் விருப்பங்களும் கொஞ்சம் கூடுதலாக நிறைவேறியுள்ளன. பதிலாக இலங்கைச் சமூகத்தினருக்கு எதிர்பார்த்த அளவுக்கு பெரிய நன்மைகள் எதுவும் கிட்டியது என்று சொல்வதற்கில்லை. எனவேதான் இன்று நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்தைச் சந்தேகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இது மக்களுக்குண்டான கசப்பின் வழியான அனுபவ வெளிப்பாடாகும்.

இதை வளரவிடாமல் தடுத்துப் புதிய வழியைக் காண வேண்டிய பொறுப்பு அரச தலைவர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உரியது. இப்போது ஆட்சியிலிருக்கும் தலைவர்கள் இந்த நாட்டின் பிரச்சினைகளையும் தேவைகளையும் நன்றாக அறிந்தவர்கள். இந்த நாட்டின் வலியை உணரக்கூடியவர்கள். கடந்த கால இலங்கையின் அத்தனை நெருக்கடிகளிலும் அரசியல் பயணத்திலும் கூட இருந்த அனுபவத்தைக் கொண்டவர்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் இரா சம்மந்தன், முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கீம், தமிழ் முற்போக்குக் கூட்டணித்தலைவர் மனோ கணேசன் தொடக்கம் பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு நிறைய அனுபவம் உண்டு. ஆகவே இவர்களுக்கு எதையும் புதிதாக யாரும் விளக்க வேண்டியதில்லை. நோயும் தெரியும். அதற்கான மருத்துவம் என்ன என்றும் தெரியும். அதைச் செய்யவேண்டியதே இவர்களுடைய இன்றைய பொறுப்பு. இன்றைய பொறுப்பை இன்றே செய்ய வேண்டும். அதை எந்தக் காரணம் கொண்டும் நாளைக்கு என்று தள்ளிப் போடக்கூடாது.

இதையே இன்றைய இலங்கை எதிர்பார்க்கிறது.

Read More »

மலைநாட்டு தமிழர்களின் உயர்வுக்காக அயராது பாடுபட்டு உழைத்தவர் அஸீஸ் -முன்னாள் அமைச்சர் அஸ்வர்

மலைநாட்டு தமிழர்களின் உயர்வுக்காக

அயராது பாடுபட்டு உழைத்தவர் அஸீஸ்

-        முன்னாள் அமைச்சர் அஸ்வர்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

மறைந்த மலையகத் தலைவர் ஏ. அஸீஸ் இன்று உயிருடன் இருந்திருந்தால் முற்போக்கு சக்திகளோடு ஒன்றிணைந்து மேற்கத்தியவாதத்திற்கும் காலணித்துவ கிடுகிடுகளுக்கும் எதிராக நிச்சயம் போராடி இருப்பார். ஏனெனில், அவருடைய வாழ்கையே முற்போக்கு சக்திகளோடு இணைந்ததாக அமைந்திருந்தது. இன்று நாட்டில் நடைபெறுகின்ற பல சர்வதேச சூழ்ச்சிகளுக்கும் சியோனிச வாதத்துக்கும் எதிராக அவர் நிச்சயம் குரல் கொடுத்திருப்பார். அவர் இல்லாத குறை எம்மை மிகவும் வாட்டுகிறது என முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.

அண்மையில் தெஹியோவிட்ட பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற 'மலைச்சுடர் வாழ்வோரை வாழ்த்துவோம்' விழாவில் உரை நிகழ்த்துகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அஷ்ரப் அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் மேலும் பேசிய அவர் மேலும் கூறியதாவது,

அஸீஸ் என்றும் நாட்டுப்பற்று உள்ளவராகத் திகழ்ந்தார். அவர்  மலைநாட்டு தமிழர்களின் உயர்வுக்காக பல போராட்டங்களை நடத்திய முன்னணி தலைவர் என்று நாம் விபரிக்கலாம். இலங்கை - இந்திய காங்கிரஸின் முதல் தலைவராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார். பிறகு ஜனநாயக செயலாளர் காங்கிரஸை ஆரம்பித்தார். அவருடைய சேவைபல வழிகளிலும் எமது நாட்டில் பரந்து விரிந்து காணப்பட்டது. அவர் அகில இலங்கை கல்வி மாநாட்டில் ஆரம்ப உறுப்பினராக வந்து அதன் உபதலைவராகவும் மற்றும் முஸ்லிம்களின் கல்விக்காக பல வழிகளிலும் குரல் கொடுத்தார். அதுமட்டுமல்ல, முஸ்லிம்களுடைய உயர்வுக்காகவும் மிகவும் ஈடுபாடு கொண்டு உழைத்தார்.

எனவே அவருடைய நாமத்தில் இந்த நிகழ்வு நடைபெறுவது மிக மிக பொருத்தம். நாட்டு மக்களுக்காக பல வழிகளிலும் சேவை செய்த ஏ. அஸீஸ் எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்றும் தெரிவித்தார்.

 

 

Read More »

பிரதியமைச்சர் அமீர் அலி தமது 13 வருட அரசியலின் கல்குடாவுக்கான சேவைகளை முடிந்தால் பட்டியலிட்டு காட்ட்டும் -கல்குடா இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சவால்,

பல விதமான   ஊழல் மற்றும் காணி மோசடிக் குற்றச்சாட்டுக்களுக்கு  பெயர்போன பிரதியமைச்சர் அமீர் அலிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பதிலளிக்க வேண்டிய  எந்த தேவையுமில்லை என கல்குடா தொகுதியின் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞரணி அமைப்பாளர் லியாப்தீன் தெரிவித்தார்.

 

கடந்த 13 வருடத்திற்கும்  மேலாக கல்குடா அரசியலில்  இருக்கும் பிரதியமைச்சர் அமீர் அலியால் முன்னெடுக்க முடியாத மக்களின் பல்வேறு அடிப்படை அபிவிருத்திப் பணிகளை கிழக்கு முதலமைச்சர் கடந்த இரண்டு வருடங்களில் மேற்கொண்டமையை ஜீரணித்துக் கொள்ள முடியமையினாலேயே பிரதியமைச்சர் அமீர் அலி நிலை தாழ்ந்து கருத்து தெரிவித்து வருவதாக இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர்  லியாப்தீன் கூறினார்,

 

கல்குடாத் தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் இளைஞரணி  உறுப்பினர்களுக்கான கூட்டத்தின்  போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

 

அங்கு தொடர்ந்து  கருத்து  தெரிவித்த இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் எஸ் லியாப்தீன்,

 

தற்போது  கிழக்கு மாகாண  முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்  கல்குடாத் தொகுதியில் கடந்த 13 வருடமாக பிரதியமைச்சர் அமீர் அலி செய்யாத  சேவைகளை தான் பதவியேற்று இரண்டு ஆண்டுகளில் செய்து முடித்து வருவதால்   நாளுக்கு நாள் அவரின் மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது,

 

இதனால்  கோமாளித்தானமாக  அறிக்கை விட்டும் சிறுபிள்ளைத் தனமான கருத்துக்களை  கூறியும் பிரதியமைச்சர் அமீர் அலி  மக்கள் எள்ளி நகைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

 

கிழக்கு முதலமைச்சர் கோவைகளில் அபிவிருத்திகளைக் காட்டுவதாக பிரதியமைச்சர் குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தார்,

நேர்மையாகவும் நியாயமாகவும்  மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளே அதன் நிதியொதுக்கீடுகள் மற்றும் செலவீனங்களுடன்  ஆவணப்படுத்தப்படுகின்றன,

முறைகேடாகவும் தமது பினாமிகளுக்கு கொடுக்கப்படும் ஒப்பந்தங்கள் ஊடாகவும் இலஞ்ச  ஊழல்  செய்து முன்னெடுக்கப்படும் செயல்களை மக்கள் முன் பகிரங்கமாக ஒரு போதும்  முன்வைக்க முடியாது அதனால் தான் இத்தனை காலமும் பிரதியமைச்சரால் ஒரு ஆவணத்தைக் கூட மக்கள் முன்வைக்க முடியவில்லை,

கிழக்கு முதலமைச்சர் இலஞ்சம் பெற்றோ ஊழல்கள்  செய்தோ,தனது பினாமிகளுக்கு ஒப்பந்தம் கொடுத்து மக்கள் பணத்தை சுருட்டவோ இல்லையென்பதால் அவர் அச்சமின்றி பகிரங்கமாக ஆவணங்களை மக்கள் முன் வைக்கின்றார்

ஆகவே இதுவரை எமது  பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினை தொடர்பிலோ  எமது மக்களின் மீள்குடியேற்றப் பிரச்சினை தொடர்பில் பராளுமன்றத்திலோ அதிகாரிகளுடனோ இணைந்து தீர்வொன்றை பெற்றுத் தர முடியாத பிரதியமைச்சர் அமீர் அலி பாராளுமன்றத்தையும்  ஏனைய இடங்களையும் கிழக்கு முதலமைச்சரை வசைபாடவே பயன்படுத்துகின்றமை அவருக்கு வாக்களித்த மக்களுக்கே தலைகுனிவை ஏற்படுத்துகின்றது,

 

கடந்த  ஆண்டில் மாத்திரம் கிழக்கு முதலமைச்சரால் 21 கோடி ரூபாய்க்கான அபிவிருத்திகள் கல்குடாத் தொகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டும் கல்வி,விளையாட்டு,வீதி என பல துறைகளிலும் பல கோடி ரூபாய் நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,

கௌரவ அமீர் அலி அவர்களே  நீங்கள் உங்கள் 13 ஆண்டு காலமாக அரசியலில் இருக்கின்றீர்கள்,அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர்,சமுர்த்தி  பிரதியமைச்சர் மற்றும் தற்போது கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சராக  உள்ளீர்கள்,

இத்தனை அமைச்சுக்களை வைத்து உங்கள் 13 வருட அரசியல் பயணத்தில் நீங்கள்  மக்கள் மிகவும் பயன்பெறக் கூடிய வகையில் செய்த சேவைகளை உங்களால் பட்டியலிட்டுக் காட்ட முடியுமா என சவால் விடுக்கின்றேன்.

 

தற்போது  எமது பிரதேசத்தில்  எத்தனை தமிழ் முஸ்லிம் யுவதிகள் வேலைவாய்ப்பின்றி  இருக்கின்றார்கள்,உங்கள் கட்சியின் தலைவர் கைத்தொழில் அமைச்சராக இருக்கின்றார்,

உங்களால்  ஒரு  தொழிற்சாலையை அந்த வேலையில்லா இளைஞர் யுவதிகளுக்காக நிர்மாணித்துக்  கொடுக்க முடிந்ததா என்பதையும் கேட்க விரும்புகின்றேன்,

 

ஆனால் உங்கள் கட்சித் தலைவரையோ உங்களையோ  போன்று எந்த தேசிய அமைச்சுக்களும் இல்லாமல் முதலமைச்சர் அவர்கள்  ஏறாவூரில் மூன்று ஆடைத்தொழிற்சாலைகளை நிர்மாணித்து ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனையில்  இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளை நிர்மாணித்து வருகின்றார்.

நீங்கள் கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சராக  பதவியேற்று இரண்டு ஆண்டுகளும் கடந்துள்ள நிலையில் நீங்கள் இலங்கையில் எல்லாம் ஏதும் செய்யத் தேவையில்லை,உங்கள் சொந்த ஊரான கல்குடாவில் எந்தக் கிராமத்தை அபிவிருத்தி செய்துள்ளீர்கள்,

 

சாதாரண சங்கள் வாழ்வாதார உதவிகளை வழங்குவதைப் போல் 10 தையல் இயந்திரங்களையும் கோழிக்குஞ்சுகளையும் வழங்குகின்றீர்கள்.அவற்றிலும் பல்வேறு முறைப்பாடுகள் உள்ளன,

தேசிய அரசாங்கத்தின் கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சுப் பொறுப்பை வகிக்கும் நீங்கள் கோழிக்குஞ்சுகளை ஐந்து மாதத்திற்கு ஒரு தடவை 5 பேருக்கு வழங்கித் திரிகின்றீர்கள்,இதுவா ஒரு பிரதியமைச்சரின் ஆளுமை,

உங்கள் தொகுதியான வாழைச்சேனை,ஓட்டமாவடி ஆகிய பகுதிகளில் எத்தனை அடிப்படைய வசதியற்ற கிராமங்கள் உள்ளன,கழிப்பறைகள் இன்றி தெரு விளக்குகள் இன்றி பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வரும் கிராமங்களில் வசிக்கும் மக்களின் அபிவிருத்தி குறித்து ஒரு திட்டத்தைக் கூட உங்களால் முன்வைக்க முடியவில்லை.

 

 

ஓட்டமாவடி  கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பகுதிகளில் 2 ஆயிரத்து 600 பேருக்கான காணி  உறுதிப் பத்திரங்களை வழங்குவதில் பிரதியமைச்சர் மற்றும் அவரது ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு  பாதிக்கப்பட்ட மக்கள் எவருக்குமே  இறுதியில் காணிகள் கிடைக்காமல் பாதிக்கபட்ட மக்கள் மனமுடைந்து சாபமிட்டதை ஊர் மக்கள் நன்கறிவர்,

 

மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த திருமண வயதுடைய பெண்கள்,யுத்தத்தால் தமது வீடுகளை இழந்தவர்கள் போன்றோருக்கு வழங்கப்பட வேண்டிய காணிகள் முறைகேடுகளால்  யாருக்குமே வழங்கப்படாமல் போனமை மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது,

 

அதன் பின்னர் கிழக்கு முதலமைச்சரின் வருகையின் பின்னர்  அவரின் முயற்சியினால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு   கட்டம் கட்டமாக  காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமையை இன்று பாதிக்கப்பட்ட மக்கள் நன்றியுடன் நினைவு கூர்கின்றனர்,

 

அத்துடன் தேசிய  வீடமைப்பு அதிகார சபையினால் மக்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க வழங்கப்பட்ட காணிகளை தமது நெருங்கிய மூன்று பேருக்கு வழங்க முற்பட்ட பின்னர் கிழக்கு முதலமைச்சர் மாகாண சபை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை ஆகியவற்றில் அந்த மக்கள் மற்றும் காணி அதிகாரிகளை அழைத்து குறித்த 50 பயனாளிகளுக்கும் வீடுகளை வழங்க நடவடிக்கை எடுத்தார்,

ஆனால் அதே வீட்டுத் திட்டத்திற்கு எந்த வெட்கமோ குற்றவுணர்ச்சியோ இன்றி யாருக்கும் தெரியாமல் அடிக்கல் நட்டு விட்டு சென்ற உங்கள் உன்னத  செயலை ஊரே பாராட்டுகின்றது.

 

  ஆகவே பிறரை தூற்றி அரசியல் செய்வதை விடுத்து கிராமிய அபிவிருத்திப் பிரதியமைச்சர் என்ற வகையில்  கௌரவ அமீர் அலி அவர்கள் எமது பகுதிகளில் அடிப்படை வசதிகளின் வாழும் மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்ப முன்வரவேண்டும் என இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் லியாப்தீன் கேட்டுக் கொண்டார்,Read More »

கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு

கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு
28, 29 ஆம் திகதிகளில் கொழும்பில்

( மினுவாங்கொடை நிருபர் )

   பூகோள மற்றும் வலயப் பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும், கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு, நாளை (28), நாளை மறுதினம் (29), கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
 இதில், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் 700 பேர் பங்கேற்கவுள்ளனர்.
  இதன்போது, பூகோள வன்முறை பயங்கரவாதம், பயங்கரவாதத்திற்கு எதிரான பாதுகாப்புச் செயற்பாடுகள்,  நுண்ணறிவும் சைபர் சவால் மற்றும் வியூகம், பாதுகாப்புப் படைகள் மற்றும் பணிக்குழு சிவில் உறவுகள், மாநில உறவுகள்  மற்றும் அதன் பயங்கரவாத வன்முறைகள், கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளின் பங்களிப்புக்கள், பிராந்திய அமைப்புக்களின் பங்களிப்புக்கள், உலகளாவிய ஆளுகையில் செல்வாக்கு, சட்டப் பாதிப்புக்கள், ஐக்கிய நாடுகள் மூலோபாயம், உள் பாதுகாப்பு மூலோபாய ஆய்வுகள், உலக நிர்வாகத்தில் இராணுவச் செயற்பாடுகள் ஆகிய தலைப்புக்களில் கருத்தரங்குகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

( ஐ. ஏ. காதிர் கான் )

Read More »

Monday, 21 August 2017

சாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச சபையோ தேவை இல்லை

சாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச சபையோ கேட்கிறோம் என்று ஒரு விளக்கம் இல்லாமல் புலம்புவதில் எந்த விதப் பிரயோசனமும் இல்லை .

 

தற்போது மாநகர சபை என்ற பெரும் அந்தஸ்த்தில் அடங்கி உள்ள சாய்ந்தமருது தனியாகப் பிரிக்கப் படுமானால் அதன் விளைவாக   எதிர் கால பின் விளைவுகள் என்ன என்பது பற்றிய எதிர் கால தூர நோக்குள்ள ஆரோக்கியமான சிந்தனை  அல்ல என்றே கூற வேண்டும் 

 

நான் இங்கு கூறிக் கொள்வது மனிதர்களின் சிந்தனை-மனம்-சுற்றம் எனும் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு அமைவது. எல்லா மனிதர்களுக்குமே உணர்ச்சி என்பது இயல்பான ஒன்றாக இருக்கிறது. அப்படி இருக்க ஓர் எதிர்வினைக்கு அல்லது வெளிப்பாட்டுக்கு சிந்தனை முக்கியமா அல்லது உணர்ச்சி முக்கியமா என ஓர் உடனடி தீர்வு காண முடியுமா?" என்பதே 

 

தற்போது மாநகர சபை அந்தஸ்தில் உள்ள சாய்ந்தமருத்துக்கு என்ன வகையான பிரச்சினைகள்  என முதலில்  அலசப் படவேண்டும் ,அலசப் பட்டு அவைகளை தீர்ப்பதுக்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமே அன்றி குறு கிய சிந்தனையோடு பிரித்தெடுப்பது புத்திசாலித் தனமன்று. தமிழர்கள் ,முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ வழி தேட வேண்டுமே அன்றி பிரித்தாழ வேண்டும் என்ற கோஷம் அடியோடு அகற்றப் படவேண்டும் 

 

சாய்ந்தமருதை பிரித்தெடுப்பதன் மூலம் கல்முனைக்குடிமருதமுனை போன்ற முஸ்லிம்கள் வாழும் பிரதேசம் வலு இழந்து அனாதைகளாகப்படும் அத்துடன் கல்முனை என்று புகழ் பெற்ற நகரம் முஸ்லிம்களின் கையை விட்டும் சோரம் போகும்.

 

சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை வழங்கப்பட வேண்டு மென்பதில் உங்களை விட கல்முனைத் தமிழர்கள் வேகமாக இருக்கிறார்கள், சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை வழங்கப்பட்டால் அதனை காரணங்காட்டி கடற்கரைப் பள்ளி றோட்டுக்கு மேலுள்ள கல்முனை நகரம் உள்ளிட்ட பிரதேசங்கனை உள்ளடக்கி அவர்களுக்கு தனியான பிரதேச சபை, பிரதேச செயலகம் மட்டுமல்ல கல்முனை எனும் பெயரும் கூட அவர்களுக்கு மட்டும்தான சொந்தம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்

 

சாய்ந்தமருதும் பிரிக்கப்பட்டால் கல்முனை முஸ்லிம்களின் முழுப் பொருளாதாரமும் உள்ளடங்கிய கல்முனை செயலகம் மற்றும் பிரதேச சபையை அவர்களின் கைகளுக்குள் கொண்டு வந்து விடலாம் என தமிழர்கள் நம்புகிறார்கள்

 

ஆகவே பேசித் தீர்மானிக்க வேண்டிய விடயத்தை பேசாமல் தீர்மானிப்பது தவறு, அது குழப்ப சூழ்நிலையை ஏற்படுத்தலாம் என்பதை நாம் உணர வேண்டும்.

 

 சித்தம் கலங்கியவனின் அறிவு சிந்திக்க மறுக்கும்। சித்தம் தெளிந்தவனின் அறிவு சிந்தித்துக் கொண்டே இருக்கும். ஆகவே  நீங்கள் இன்னும் ஆழமாக சிந்தித்து அருமையான நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பதே எனது அவா 

 

எனவே பிரச்சினைக்கு தீர்வு காண சாய்ந்த மருதைப்  பிரிப்பதல்ல விடை அதை எப்படி தீர்த்து வைக்க முடியும் என்று சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து. மேலும் சாய்ந்தமருது நகரசபையோ அல்லது  பிரதேச சபையோ தேவை இல்லை.சாய்ந்தமருது , கல்முனை மாநகர சபையை விட்டுப் பிரியாது என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர்  மொஹிடீன் பாவா தனது கருத்தை வெளியிட்டார் 

 

 

 

 

 

 

 

 

Read More »
Loading...